வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முடிவெடுத்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். சமூகநீதி, மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகப் பண்புகள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை முன்னிறுத்தும் நோக்கில் உருவான இந்த கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாக இருக்கும். மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் வளமான எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இது உண்மையான நிவாரணமாக அமையும் – செல்வப் பெருந்தகை



