spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார்- ஆர்.எஸ்.பாரதி

செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார்- ஆர்.எஸ்.பாரதி

-

- Advertisement -

செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார்- ஆர்.எஸ்.பாரதி

செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு துன்புறத்தப்பட்டார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “விசாரணை என்பது மனித நேயத்துடன் நடைபெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி அமலாக்கத்துறை அதிகாரி போன்று பேட்டியளித்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி போல் எடப்பாடி பழனிசாமி தன்னை நினைத்துக் கொள்கிறார். முதலமைச்சரின் பேச்சுக்கு பதில் கூற முடியாமல் எதையோ பேசுகிறார். செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து ஈபிஎஸ் தவறான தகவலை கூறியிருக்கிறார். மாரடைப்பு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் அதை நாடகம் எனக் கூறுவது தவறு. மாரடைப்பு பற்றித் தெரியாமல் ஏதோ பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

we-r-hiring

RS Bharathi

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டவர்தான் அதிமுகவினர். ரூ.1.5 கோடிக்கு இட்லி சாப்பிடும் கூட்டமல்ல திமுக. பாஜக மிரட்டலுக்கு பயந்தே ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை சீட்டை விட்டுக் கொடுத்தது அதிமுக. உடல்நிலை பாதித்த தொண்டரை கட்சியின் தலைவர் பார்ப்பதில் என்ன தவறு? தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் ஈபிஎஸ். திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினை தவறாக பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும். நான் ஏதாவது தவறாகச் சொன்னால் என் மீது ஈபிஎஸ் வழக்கு தொடரட்டும். ஜெயலலிதாவின் டான்சி வழக்கிற்கும் செந்தில் பாலாஜி வழக்கிற்கும் வேறுபாடு உள்ளது” என்றார்.

MUST READ