spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கிடுக"- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கிடுக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

ttv

we-r-hiring

“கேங்மேன் தேர்வில் தேர்ச்சிப் பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கிட வேண்டும்” என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்காலத் தடை!

இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் 5,000-க்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அரசு நடத்திய எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாத காரணத்தினால் சென்னை கொளத்தூரில் உள்ள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழலுக்கு கேங்மேன் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறேன்- வைகோ

கடந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலத்தில் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனம் செய்யப்படுவோம் என தி.மு.க. அளித்த வாக்குறுதியை நம்பி காத்திருந்ததோடு, முதலமைச்சரின் அலுவலகம், மின்சார வாரியம் என கேங்மேன் பணிக்கு தொடர்புடைய பல இடங்களில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும், இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

‘பள்ளிக் குடிநீர் தொட்டியில் மலம்’- காவல்துறையினர் தீவிர விசாரணை!

ஆகவே, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கியிருக்கும் கேங்மேன் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ