
நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து இருப்பதாக வெளியான தகவலால் மாணவர்கள், பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவனம் ஈர்க்கும் ‘இறுகப்பற்று’ பட டிரைலர்!
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம் பகுதியில் இயங்கி வருகிறது அரசு நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக, குடிநீர் தொட்டியைப் பார்த்த போது, மலம் கலந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவல்துறையினருக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்த பள்ளியின் தலைமையாசிரியர் உடனடியாக, சம்மந்தப்பட்ட குடிநீர் தொட்டியை யாரும் பயன்படுத்த முடியாத வகையில், அதை முழுவதுமாக மூடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார்.
திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘தி ரோட்’…… மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு!
அதைத் தொடர்ந்து, பாப்பாரப்பட்டி காவல்துறையினரும், பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள், சம்மந்தப்பட்ட பள்ளி விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனித மலம் கலக்கப்பட்டதா? அல்லது குரங்கு உள்ளிட்ட வேறு ஏதேனும் விலங்குகளின் மலம் கலக்கப்பட்டதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.