Homeசெய்திகள்தமிழ்நாடுED, IT, CBI ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

ED, IT, CBI ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

-

- Advertisement -

 

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமற்ற அணிகளாகச் செயல்படும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

தி.மு.க அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது என்பதை உணர்த்தும் வேளாண் பட்ஜெட் – முதலமைச்சர்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சட்டத்துறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. வழக்கறிஞரணி செயலாளருமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், தாமரைச்செல்வன், துணை செயலாளர்கள் பச்சையப்பன், சந்துரு, வைத்தியலிங்கம் தலைமை கழக வழக்கறிஞர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு 10 தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

வழக்கறிஞர் அணிக்காக அனைத்து மாவட்டங்களிலும் வார் ரூம் அமைக்க உத்தரவிட்டு, எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை வழக்கறிஞர் அணி சிறப்பாக கொண்டாடுவது என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய துறைகளை தங்கள் கட்சிக்கான ஏவல் அணியாக பாஜக நடத்துகிறதென குற்றஞ்சாட்டியுள்ள தி.மு.க. சட்டத் துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, அதனை கண்டித்து ஒரு தீர்மானத்தையும் இயற்றியுள்ளதாகக் கூறினார்.

ஸ்டெர்லைட் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்துக்கள் தவறானவை – கே.பாலகிருஷ்ணன்

சேலம் இளைஞர் அணி மாநாட்டை சிறப்பாக நடத்தியும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் மூலம் தமிழக வீரர்கள் அதிக அளவில் பதக்கங்கள் வெல்ல காரணமாய் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இருந்ததாகவும் பாராட்டி, தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

2024-2025 ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த தமிழ்நாடு அரசுக்கும், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் நன்றி மற்றும் பாராட்டை தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்களை தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டத்தில் இயற்றி உள்ளனர்.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.வின் விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இரண்டாம் நாளாக நடைபெற்றது.

MUST READ