
சென்னையில் இன்று (மார்ச் 03) 44 மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே
சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் மதியம் 02.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தாம்பரத்தில் இருந்து காலை 10.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது
பராமரிப்புப் பணிக் காரணமாக, சென்னையில் நான்காவது வாரமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.