spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக கூட்டணி அதிமுக, தவெக, பாஜக என எல்லாரும் சேர்ந்து வந்தாலும் முறியடித்து மகத்தான வெற்றி...

திமுக கூட்டணி அதிமுக, தவெக, பாஜக என எல்லாரும் சேர்ந்து வந்தாலும் முறியடித்து மகத்தான வெற்றி பெறும் – வீரபாண்டியன்

-

- Advertisement -

அதிமுக, தவெக, பாஜக என எல்லாரும் சேர்ந்து வந்தாலும் மகத்தான வெற்றியை திமுக கூட்டணி பெறும் கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டியளித்துள்ளாா்.திமுக கூட்டணி அதிமுக, தவெக, பாஜக என எல்லாரும் சேர்ந்து வந்தாலும் முறியடித்து மகத்தான வெற்றி பெறும்  - வீரபாண்டியன்கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “கருத்துக் கணிப்பு என்பது மக்கள் தீர்ப்பிற்கு நிகரானது அல்ல என்றும், கணிக்கலாம் அதற்கு ஜனநாயகத்தில் உரிமை உண்டு, நிறைவான தீர்ப்பு கருத்துக் கணிப்பு அல்ல, மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு தான் நிறைவான தீர்ப்பு என்றும், மக்கள்தான் எஜமானர்கள் என்றும், எங்களைப் பொருத்தவரை எந்த கணிப்பாக இருந்தாலும், எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி, திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தொடங்கி இருக்கின்ற போர் தமிழக உரிமைகளுக்கான போர், நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பதற்கான போர், இந்த போர் அரசியல் போர், இந்த போரை தமிழக மக்கள் ஆதரிப்பார்கள் என்றும், இதனால் தான் நாங்கள் வெற்றி பெறுவோம் எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது.

திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. அது வெற்றி பெறும் என்றும், அதைவிட நாங்கள் நம்புவது தமிழக மக்களை என்றும், எங்களைப் பொறுத்தவரை கணிப்பு, சதவீதம், அதிமுக, தமிழக வெற்றி கழகம், பாஜக என எல்லோரும் சேர்ந்து வந்தாலும் மகத்தான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பெற்றே தீரும் எனவும் தெரிவித்தார்.

we-r-hiring

பீகார் தேர்தல் வெற்றி என்பது ஜனநாயகத்தை வீழ்த்தி பெறப்பட்ட ஒரு வெற்றி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து பெறப்பட்டுள்ள வெற்றி, நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் கைக்குள் அடங்கிவிட்டதை உலகமே பார்த்து நகை செய்கின்றது. நடைபெற்று முடிந்த இந்த பீகார் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று இருக்கலாம், ஆனால் ஜனநாயகம் தோல்வி அடைந்து இருப்பதாகவும் பீகார் தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்தார்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி வேண்டாம் என்றும் அல்லது கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம் அதில் ஒன்றை தற்போது நிறைவேற்றியுள்ளார்கள், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தற்போது தடுமாறுவதாகவும் பலரும் மனம் சோர்வடைந்து விட்டதாகவும், ஒட்டு மொத்தமாக அரசு ஊழியர்கள் இதனால் தான் இந்த பணியை செய்யமாட்டோம் என சொல்லி வருவதாகவும், எவ்வளவு வேக வேகமாக இந்த சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணியை திணிப்பதற்கான நோக்கம் என்ன என்றும், முதல்வர், சட்டமன்றம், எதிர்க்கட்சிகள் என அனைவரும் கேட்டுக் கொள்கின்றார்கள் எல்லாவற்றையும் மீறி தேர்தல் ஆணையம் இதனை திணிக்க முயற்சி செய்வது என்பது தேர்தல் ஆணையம் தற்சார்புடன்  இயங்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் கைக்குள் அடங்கிப் போய் இருக்கிறது என்றும் இது தேர்தல் ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்றும் SIR பணிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தாா்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய பகுதிகளில் கடுமையான மழைப்பொழிவு பெய்திருக்கிறது.  உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஒன்றிய அரசு இந்த சூழலில் கடந்த ஆண்டு தருவதாக சொன்ன பணத்தையை இதுவரை தரவில்லை, எனவே  இதுபோன்ற பேரிடர் காலங்களில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தயக்கமின்றி தர வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாகவும், ஒன்றிய அரசு நூறு சதவீதம் காப்பீட்டு துறைகளில் அந்நிய முதலீடு என நிதி அமைச்சரே அறிவித்து இருக்கின்றார். இது பெரும் ஆபத்து என்றும், காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு என்றால் அடுத்தடுத்து அனைத்து துறைகளிலும் நேரடி முதலீடு வரும் என்றும், இது பெரும் ஆபத்து என்றும், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு என்பது நமது பொது துறையை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கும் இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.

தமிழ்நாட்டில் ஆளுநர் அவர்கள் ஆளுநர் மாளிகையை மக்கள் மாளிகை என மாற்றியுள்ளார். உள்ளபடியே அவருக்கு மக்கள் மீதும் மக்கள் அதிகாரத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்வி எழும்புவதாகவும், அவ்வாறு இருந்தால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதல்வர் அவர் தலைமையில் இயற்றப்படுகின்ற சட்டமன்ற தீர்மானங்களை கிடப்பில் போடுவாரா என்றும், எளிதில் கடந்து செல்வாரா என்றும், இதனை மக்கள் மாளிகை என்பதற்கு பதிலாக ஆளுநரின் அதிகார மாளிகை என்று தான் சொல்ல வேண்டும். முதல்வரின் வேண்டுகோளையும், சட்டமன்றத்தின் தீர்மானங்களை ஆளுநர் மதித்ததாக தெரியவில்லை;

உதாரணத்திற்கு கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற சட்டமன்ற தீர்மானத்தை ஆளுநர் ஏன் கிடப்பில் போட வேண்டும் என்றும் உள்ளபடியே அவர் மக்களை மதிப்பதாக இருந்தால் உள்ளபடியே ஆளுநர் மாளிகை மக்கள் மாளிகை என அவர் உணர்வார் என்றால் ஜனநாயகத்தில் அவ்வாறு உணர வேண்டும் அது உண்மை என்றால் மக்கள் அதிகாரத்தின் அடையாளமாக இருக்கின்ற சட்டமன்றத்தை அவர் மதிக்க வேண்டும் என்றும், ஆளுநர் மாளிகை அதிகாரத்தின் வடிவம் அல்ல நியமன வடிவம், முதல்வர் தலைமையிலான சட்டமன்றமே மக்கள் அதிகாரத்தின் வடிவம் என்றும், உள்ளபடியே ஆளுநர் மாளிகை மக்கள் மாளிகை என்றால் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், ஆளுநர் தமிழக அரசிற்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் எந்த விதமான நெருக்கடியும் தரக்கூடாது என்றும், அடிக்கடி அவர் தமிழ்நாடு சட்டமன்ற மீது ஏறி அமர அவர் விரும்பக் கூடாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.

திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்

 

MUST READ