அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது
– என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டாா். பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது ஆர்.பி.உதயக்குமார் பேசியதாவது, ” வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து, வாக்காளர் சீர்திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஒரு முகவரியில் 360 பேர் பெயர், இறந்தவர்களின் 50 பேர் பெயர் பட்டியலில் தொடர்வது போன்ற தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

21 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த SIR பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்றும், அதிமுக இதற்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளாா்.
டெட்வா புயலின் பாதிப்பைப் பற்றி அவர் கடுமையாக பேசினார், டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன, விவசாயிகள் கண்ணீரில் உள்ளனர், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன என்று கூறினார்.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் பல உயிரிழப்புகள் தடுக்கப்படவில்லை என்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு மற்றும் காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழும் பேருந்து விபத்துகள் மக்களை பதற்றத்தில் ஆழ்த்துவதாகவும், சாலைகளில் போக்குவரத்து கண்காணிப்பு போதுமானதாக இல்லை என்றும், இயற்கை பேரிடர்களை தவிர்க்க முடியாதபோதும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்திருந்தால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.
அரசு விளம்பர நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டுள்ளது எனவும் நடைமுறை பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று குற்றம் சாட்டினார். அரசை குறிவைத்து கடும் விமர்சனம்“இந்த அரசுக்கு இன்னும் நான்கு மாதங்கள் ஆயுள் தான் உள்ளது. இந்த காலத்தை நீட்டிக்க சலுகை மழை கொடுப்பதைப் பற்றியே யோசிக்கிறது; மக்களை பாதுகாப்பது பற்றி எந்த கவலையும் இல்லை” என்றார்.
வடகிழக்கு பருவமழையில் தோல்வியடைந்த திமுக அரசு ‘சலுகை மழை’ மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளாா். செங்கோட்டையன் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே விரிவாக விளக்கிவிட்டதாகவும், “கட்சியை ஒன்றிணைக்கிறேன்” என்ற செங்கோட்டையன் அதை மறந்துவிட்டார், “இன்னும் பல அதிமுகவினர் வருவார்கள்” என்றதும் மறைந்து விடுவார், ஒன்றிணைக்கப் போகிறேன் என்று சொல்லி வேறு கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று உதயகுமார் கடுமையாக விமர்சித்தார்.
“கட்சி தலைமைப் பதவியை அம்மா அவர்கள் எதற்காக இறப்பு வரை வழங்கவில்லை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரைப் பற்றி பேசாதது அரசியல் நாகரிகத்துக்காக,” என்றார்.
சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…


