Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிட முடிவு! தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிட முடிவு! தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

-

- Advertisement -

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் தொடங்கவுள்ளது.

தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிட முடிவு! தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

2024-25 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வை 8,21,057 மாணவர்கள் எழுதினாா்கள். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. விடைத்தாள் திருத்தும்  பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து திருத்துதல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 46 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளதாகவும், விடைத்தாள் திருத்துதல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் செய்தல்  உள்ளிட்ட திருத்துதலுக்கு பின்பான பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படுமெனவும், தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தாா்கள்.

நீட் தேர்வு அச்சத்தால் ஒரே மாதத்தில் மூன்றாவது உயிரிழப்பு! அன்புமணி ஆவேசம்..!

MUST READ