சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ. 53,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.70 காசுகள் குறைந்து ரூ95.50ஆக விற்கப்பட்டது. ஒரு கிலோவுக்கு ரூ.700 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.95,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துள்ளது. இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மக்களவை புதிய சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு – மோடி, ராகுல்காந்தி வாழ்த்து (apcnewstamil.com)
சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.94,500ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து, ரூ.94.5ஆக உள்ளது.