இந்தியா நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது. புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


18-வது மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளை கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்தது.
இந்தியா கூட்டணி 236 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

மக்களவையின் முதல் கூட்டம் 24-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. ஜூலை 3 ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.க்கள் பதவியேற்றனர். எம்.பி.க்கள் பதவியேற்புக்கு பிறகு 26-ந் தேதி இன்று சபாநாயகர் தேர்தல் நடந்தது.
துணை சபாநாயகர் பதவியை இந்தியா கூட்டணிக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு ராஜ்நாத் சிங்கிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா? (apcnewstamil.com)
அதனால் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. 236 எம்.பி.க்கள் கொண்ட எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்குவது மரபு. அதன்படி எதிர்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஆளும் பாஜக நிராகரித்து விட்டது.
துணை சபாநாயகர் பதவியை கொடுக்காததால் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டது. அதே போன்று ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய நினைக்கும் பா.ஜ.க -வின் முயற்சிக்கு இந்தியா கூட்டணி முற்றுப்புள்ளி வைத்தது.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கான குரல் வாக்கெடுப்பில் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அவர் மக்களவை சபாநாயகராக 2 வது முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். தேர்வு செய்யப்பட்ட சபாநாயகருக்கு பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.



