அரசு ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தின் சம்பளம் ஏப்ரல் 2ம் தேதியில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, 2024-2025ம் நிதியாண்டுக்கான கடைசி நாளாகும் மார்ச் 31ம் தேதி மற்றும் அடுத்த நாள் வங்கி விடுமுறை என்பதனால், மார்ச் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஏப்ரல் 2ம் தேதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் 9.30 இலட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 இலட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்கான சம்பளம், மற்றும் ஓய்வூதியம் ஏப்ரல் 2, 2025 அன்று அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விடுமுறை, மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை என்பதால் வழக்கமான மாத இறுதி பணிகளை நிறைவேற்ற முடியாது. மேலும், ஏப்ரல் 1ம் தேதி வருடாந்திர கணக்கு முடிவுக் காரணமாக வங்கிகளில் எந்தப் பணிகளும் நடைபெறாது. இதன் காரணமாகவே சம்பளமும் ஓய்வூதியமும் ஏப்ரல் 2ம் தேதிக்குத் மாற்றப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனை போட்டி? அண்ணாமலை ‘Decoding’! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!