Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநரின் செயலாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ஆளுநரின் செயலாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

-

- Advertisement -

 

உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு!
Photo: Supreme Court

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு மீது பதிலளிக்குமாறு ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு தொடர்பான அடுத்த விசாரணை வரும் நவம்பர் 24- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

“தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று (நவ.10) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்தகி, வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அதில், மசோதாக்கவுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார், கைதிகளை விடுவிக்கும் அரசின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். அரசின் 14 பணிகளுக்கான காலிப் பணியிடங்களில் 10 பணியிடங்களைத் திறக்காமல் இருக்கிறார் என அவர்கள் வாதிட்டனர்.

அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் ஆளுநரின் நடவடிக்கை உள்ளதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ‘AS SOON AS POSSIBLE’ என்ற வாக்கியத்தை ஆளுநர் தவறாகப் புரிந்துக் கொண்டு செயல்படுவதாக அவர்கள் வாதிட்டனர்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ்!

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, நிலுவையில் உள்ள மசோதாக்கள் எப்போது நிறைவேற்றப்பட்டவை, எவ்வளவு நாட்களாக நிலுவையில் கிடக்கின்றன? என கேள்வி எழுப்பினார். இந்த மனு மீது ஆளுநர் மாளிகையின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் நவம்பர் 24- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

MUST READ