Homeசெய்திகள்தமிழ்நாடுவெப்ப அலை: திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு

வெப்ப அலை: திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு

-

கடும் வெப்பத்தால் தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் சென்னை மற்றும் மதுரையில் காலை மற்றும் பகல் வேலைகளில் திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இது பற்றி அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

வெப்ப அலை: திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு

அதில் சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் தற்போது நிலவிவரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நிலை பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு திறந்தவெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் இறுதி வரை இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் கட்டுமான நிறுவனங்கள் பின்பற்றுகின்றனவா என்பதை இணை இயக்குனர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என தொழிலக பாதுகாப்பு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

MUST READ