spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆபாசப் படங்கள்: உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

ஆபாசப் படங்கள்: உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

-

- Advertisement -

 

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
File Photo

ஆபாச படங்கள் தொடர்பான உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

பொன்முடி மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்த இளைஞர் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல எனவும், சம்மந்தப்பட்ட இளைஞரை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஆபாச படங்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்-க்கு கண்டனம் தெரிவித்ததுடன், ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும் என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் கடின உழைப்பால் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் – செல்வப்பெருந்தகை!

இந்த வழக்கு குறித்து பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு நோட்டீஸ் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

MUST READ