spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!

-

- Advertisement -

 

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!

we-r-hiring

வாக்களிக்க ஏதுவாக, சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாளை சினிமா காட்சிகள் ரத்து!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இருந்து பிற இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக தென் மாவட்டங்களை நோக்கி அணி வகுத்துச் சென்றனர்.

நடிகர் மன்சூர் அலிகான் உடல் நிலையில் முன்னேற்றம்!

குறிப்பாக, குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்தை அடைவதற்கு அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. ரயில் நிலையம் வெளியே ஏராளமான பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், சாலையில் போக்குவரத்துத் தடைப்பட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

MUST READ