கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது.
தமிழகத்தையே உலுக்கிய உயிரிழப்புகள் குறித்து குழு உறுப்பினர், குஷ்பு காவல்நிலையத்தில் ஆய்வு நடத்தி வருவதாகவும் மேலும் இது குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போது முதற்கட்டமாக காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கோண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் பின்பு பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் மேலும் இது சம்மந்தமான குற்றவாளிகள் அவர்களில் கைதானவர்கள் போன்ற தகவல்களை கேட்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஷச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதில் 6 பெண்களும் உள்ளனர் ஆகையால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இக்குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்திருக்கிறது.
150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.