
சண்முகா நதியை அடுத்த வனப்பகுதியில் திரிந்த அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது.

ஒடிஷா ரயில் விபத்து- 125 ரயில்கள் ரத்து!
கடந்த மே மாதம் 27- ஆம் தேதி அன்று தேனி மாவட்டம், கம்பத்திற்குள் நுழைந்த அரிசிக்கொம்பன் யானை, மேகமலைக்கு சென்றது. பின்னர், சின்ன ஓவலாபுரம் ஒட்டியுள்ள வனப்பகுதியில் அரிசிக்கொம்பன் யானை, கடந்த ஏழு நாட்களாக இருந்தது. யானையைப் பிடிக்க பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, ஊட்டி முதுமலையில் இருந்து கும்கிகள் வரவழைக்கப்பட்டன.
சமத்தளத்திற்கு வந்த பிறகே, யானையைப் பிடிக்க வேண்டும் என வனத்துறையினர் காத்திருந்தனர். விவசாயிகள் அளித்த தகவலின் படி, யானை சமத்தளத்திற்கு வந்ததை உறுதிச் செய்த வனத்துறையினர், கால்நடை மருத்துவக் குழுவின் ஆலோசனை படி, யானைக்கு இரண்டு டோஸ் மயக்க ஊசி செலுத்தினர்.
மயக்க ஊசி செலுத்தப்பட்ட அரிசிக்கொம்பன் யானை கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது. பிடிப்பட்ட அரிசிக்கொம்பன் யானை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.