spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கொங்கு மண்டலம் யாருக்கு என்பதைப் பார்ப்போமா?"- அண்ணாமலை சவால்!

“கொங்கு மண்டலம் யாருக்கு என்பதைப் பார்ப்போமா?”- அண்ணாமலை சவால்!

-

- Advertisement -

 

we-r-hiring

ஜூன் 04- ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதைப் பார்த்து விடலாம் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

இந்தியாவில் ரூபாய் 1,16,521 கோடிக்கு ஐபோன்கள் தயாரிப்பு!

பா.ஜ.க.வின் மாநில தலைவரும், கோவை மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “போதைப்பொருள் கடத்தல் கும்பல் கதாபாத்திரமான ரோலக்ஸை குழந்தைக்கு பெயராக வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். வடக்கில் இருந்தால் கெட்டவர்கள், தெற்கில் இருந்தால் நல்லவர்கள் போல் படங்களில் காட்டுகிறார்கள்.

யாராவது ஜி என்று சொன்னால் அவரை கெட்டவர் போல் படங்களில் காட்டுகின்றனர். கொங்கு மண்டலம் யாருக்கு என்பதைப் பார்ப்போமா? வரும் ஜூன் 04- ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்து விடலாம்”. மத்தியில் பா.ஜ.க., மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி என்பதால் நாங்கள் தி.மு.க.வைதான் விமர்சிக்க முடியும். பா.ஜ.க.வுக்கு தி.மு.க. தான் போட்டி என்பதால் அவர்களை தான் விமர்சிக்க முடியும்.

இந்தியா வருகை தரும் எலான் மஸ்க்!

ஊழல் பல்கலைக்கழகத்தின் பெயரை ஸ்டாலின் என்று வைத்தால் அதில் வேந்தராக மோடி இருப்பார். பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை வேந்தர்கள் தான் வெளிக்கொண்டு வருவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ