சென்னையில் மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு தொடர்பாக மதுரை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை கொரட்டூரில் அடுக்குமாடி குடியுருப்பில் வைத்து
பலர் சேர்ந்து காமராஜை படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை கடந்த 2015 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 3 மாதத்தில் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தரப்பில் விளக்கம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கின் விசாரணை முழுமையாக முடிந்துவிட்டது . வரும் நவம்பர் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் மேற்கண்ட வழக்கில் இன்று மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தீர்ப்பு வழங்கி உள்ளார். அந்த தீர்ப்பில், வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்பனாவை தவிர மற்றவர்களை மதுரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை….. ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!