spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமஹா சிவராத்திரியையொட்டி, பூக்களின் விலை உயர்வு!

மஹா சிவராத்திரியையொட்டி, பூக்களின் விலை உயர்வு!

-

- Advertisement -

 

we-r-hiring

மஹா சிவராத்திரியையொட்டி, ஓசூர், ஆண்டிப்பட்டி பூ சந்தைகளில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி சிறுமி கொலை தலைகுனிவை ஏற்படுத்தியுளது – திருமாவளவன் அறிக்கை!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, ரோஜா ஆகிய மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலர் சந்தையில் பெரும்பாலான பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதிகபட்சமாக மல்லிகை பூ ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், கனகமரம் 500 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 200 ரூபாய்க்கும், சம்பங்கி, அரளி பூ 400 ரூபாய்க்கும் விற்பனையானது.

மருமகனை வேன் மோதி கொல்ல முயன்ற மாமனார்!

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலர் சந்தைகளில் கடந்த வாரம் பூக்களின் விலை சரிந்து காணப்பட்ட நிலையில், தற்போது விலை அதிகரித்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து பூக்களை வாங்குவதற்காக வியாபாரிகள் ஓசூருக்கு குவிந்து வருவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ