spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாட்டை காக்கும் காவல்துறைக்கு பதக்கங்கள்… எட்டு கிராம் தங்கம், ரூ.25,000 அறிவிப்பு…

நாட்டை காக்கும் காவல்துறைக்கு பதக்கங்கள்… எட்டு கிராம் தங்கம், ரூ.25,000 அறிவிப்பு…

-

- Advertisement -

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டை சேர்ந்த 24 போலீசாருக்கு குடியரசு தலைவர் பதக்கங்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.நாட்டை காக்கும் காவல்துறைக்கு பதக்கங்கள்… எட்டு கிராம் தங்கம், ரூ.25,000 அறிவிப்பு…தமிழ்நாட்டை சேர்ந்த 24 போலீசாருக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவித்துள்ளது ஒன்றிய அரசு.  தகைசால் பணிக்காக மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கும், மெச்சத்தக்க பணிக்காக 21 போலீசாருக்கும், விருது வழங்கப்படுகிறது. தகைசால் பணிக்காக ஏடிஜிபி பால நாகதேவி, ஐ.ஜி.கள் கார்த்திகேயன் மற்றும் லட்சுமிக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது. சிறப்பான சேவைக்காக எஸ்பிகள் ஜெயலட்சுமி, விமலா, துணை ஆணையர் சக்திவேல், டிஎஸ்பி துரைபாண்டியன், கோபால சந்திரன், சுதாகர், தேவசகாயம், சந்திரசேகர், வேல்முருகன், இணை ஆணையர்கள் முருகராஜ், கிறிஸ்டின் ஜெயசீலன் ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ஆணையர்கள் 2 பேருக்கும், ஆய்வாளர்கள் எஸ் ஐ கள் 11 பேருக்கும், ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது.

மேலும், 45 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களும், சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணையில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இந்த பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தில் முதலமைச்சரின் காவல்புலன் விசாரணைக்காக சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கப்படும். சென்னை சைபர் கிரைம் டிஎஸ்பி பூரணி நெல்லை சிபிசிஐடி ஆய்வாளர் உலக ராணி, சென்னை கடத்தல் தடுப்பு ஆய்வாளர் லதா, சேலம் மகுடஞ்சாவடி ஆய்வாளர் செந்தில் குமாா், தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனாதத், திண்டுக்கல் சிபிசிஐடி ஆய்வாளர் சந்தானலட்சுமி, திருப்பூர் வடக்கு ஆய்வாளர் ஜெகநாதன், பெருமாநல்லூர் ஆய்வாளர் வசந்தகுமாா், அரியலூர் சிபிசி லேடி ஆய்வாளர் திலகா தேவி, நாகை சிபிசிஐடி ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

ஐந்து காவல் அதிகாரிகளுக்கு பொது சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவித்தது. நெல்லை எஸ்பி சிலம்பரசன், சென்னை காவல் தலைமையாக கூடுதல் எஸ் பி பிரவின் குமார், சிறைத்துறை ஏ டி ஜிபி மகேஷ்வர் தயாள், நுண்ணறிவு பிரிவு துணைத் தலைவர் ஜி.மகேஷ், சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் தா.மேரி ராஜ் ஆகியோருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விருது பெறுபவா்களுக்கு தலா எட்டு கிராம் தங்கப்பதக்கம் மற்றும் ரூபாய் 25,000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட் வரலாற்றில் புதிய கோட்டை கட்டிய ‘கூலி’!

MUST READ