முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தாய் நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில், தமிழர்களின் நூறாண்டுக் கனவை நனவாக்கி நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுதந்து, முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் வகுத்துக்கொடுத்த பாதையில் தமிழ், தமிழர் நலன் காக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இரணடாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் நடைபெறவுள்ளது” என அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழன் என்கின்ற முறையில் பெருமிதத்தோடு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.