spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"வேறு வழியின்றிக் கடைசி நடவடிக்கையாக செந்தில் பாலாஜி கைது"- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு!

“வேறு வழியின்றிக் கடைசி நடவடிக்கையாக செந்தில் பாலாஜி கைது”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு!

-

- Advertisement -

 

we-r-hiring

செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய வேதாந்தா!

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாக கைது செய்யவில்லை. சம்மனைப் பெற செந்தில் பாலாஜி மறுத்தார்; அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்துக் கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றிக் கடைசி நடவடிக்கையாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கு காரணங்கள் உள்ளன. வருங்காலத்தில் செந்தில் பாலாஜியைக் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஜூன் 13- ஆம் தேதி நடந்த சோதனையில் செந்தில் பாலாஜி உடன் இருந்தார். அவரை சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கவில்லை. சாட்சிகளைக் கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

“தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

பெருந்தொகை டெபாசிட் செய்யப்பட்டது பற்றி எந்த விளக்கமும் செந்தில் பாலாஜி தரப்பில் அளிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி கைது பற்றி அவரது குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவலளிக்கப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ