spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை தாக்கல்- செந்தில் பாலாஜி

வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை தாக்கல்- செந்தில் பாலாஜி

-

- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை தாக்கல்- செந்தில் பாலாஜி

வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

senthil balaji

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “நீட் தேர்வுக்கான மசோதா திருப்பி அனுப்பியதையே, கடந்த ஆட்சியில் மறைத்தனர். ஆகவே நீட், சட்ட ஒழுங்கு குறித்து பேசுவதற்கு அதிமுகவுக்கு தார்மீக உரிமை கிடையாது. ஈபிஎஸ் மக்கள் மீது அக்கறை இருந்தால் முழு நிதிநிலை அறிக்கையையும் கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கவில்லை. அதிமுக ஆட்சியில் மகளிருக்கு செல்போன் வழங்கும் திட்டம் நிறைவேற்றாதது ஏன்? பட்ஜெட் அறிக்கையை வாசிக்கத் தொடங்கிய உடனே எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார். மக்கள் மீது நலன் கொண்ட எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், முழு நிதி நிலை அறிக்கையையும் கேட்டு அதன் பிறகு தன் கருத்துக்களை வெளியிட்டு இருக்கலாம்

we-r-hiring

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்திய நிலையில் எடப்பாடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருந்தது. வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது” எனக் கூறினார்.

MUST READ