Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் - தள்ளுமுள்ளு

மதுரையில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் – தள்ளுமுள்ளு

-

முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா அரசு  முயற்சி மேற்கொள்வதை  கண்டித்து மதுரையில் விவசாயிகள் போராட்டம்,போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

மதுரையில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் – தள்ளுமுள்ளு

புதிய அணை கட்டும் கேரளா அரசின் முயற்சியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கிட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கேரளா அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்கள்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/anbumani-ramadoss-tweet-6/87884

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்திலிருந்து வருமான வரித்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

மதுரையில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் – தள்ளுமுள்ளு

போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பேரணி செல்வதற்கு அனுமதி மறுத்தனர், இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதே பகுதியில் போராட்டம் நீடித்தது, பின்னர் விவசாயிகள் வருமான வரித்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர், போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் கேரளா அரசின் செயல்பாட்டால் அதிர்ச்சி அடைந்த விவசாயி பஞ்சனாதன் உயிரிழந்தது போல நடித்துக் காட்டப்பட்டது, அப்போது உயிரிழந்ததாக கருதப்பட்ட விவசாயி பஞ்சநாதனை சுற்றி மற்ற விவசாயிகள் மாரடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், கேரளா அரசு வெளியிட்ட புதிய அணை கட்டும் அரசாணையை விவசாயிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.

MUST READ