spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை டாக்டர்கள் வீடுகளில் NIA ரெய்டு

கோவை டாக்டர்கள் வீடுகளில் NIA ரெய்டு

-

- Advertisement -

கோவையில் டாக்டர்கள் இல்லத்தில் NIA சோதனை நடைபெற்றது.

கோவை டாக்டர்கள் வீடுகளில் NIA ரெய்டு

we-r-hiring

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் டாக்டர்கள் ஜாபர் இக்பால், நயன் சாதிக் ஆகியோர் இல்லங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஜாபர் இக்பால், நயன் சாதிக் ஆகிய இருவர் வீட்டில் அதிகாலை முதலே தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக  இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. NIA சோதனை அதிகாரிகள்  கர்நாடகவில் இருந்து வந்துள்ளனர்.

கோவை டாக்டர்கள் வீடுகளில் NIA ரெய்டு

கோவை போலீசார் உதவியுடன்  சாய்பாபா காலனி பகுதியில் உள்ள நாராயண வீதி, சுப்பன்னா சவுந்தர் வீதி ஆகிய இரு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.

MUST READ