ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்படும் என போக்கவரத்துத் துறை சாரிபில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து உடனடியாக புகார் அளிக்க தொலைபேசி எண்களை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, போக்கவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகார் ஊறுதியாகும் பட்சத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது சொதனை மேற்கொள்ளப்பட்டு, விதிமுறைகளின் படி அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைபிடிக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாகவும் புகார் அளிக்க வசதியாக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- சென்னை 9944253404,
- மதுரை 9095366394,
- விழுப்புரம் 9677398825
என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பயணத்தின் போது ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டால், தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகை காலங்களில் தொடரும் ஆம்னி பேருந்துகளின் வசூல் வேட்டை – டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்


