
அ.தி.மு.க. கட்சிப் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை- மூன்று பேர் கைது!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க. கட்சியின் கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி சதீஷ்குமார் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ஓ.பன்னீர்செல்வம் அவசர முறையீடு செய்துள்ளார். அத்துடன், இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!
இதற்கு ஒப்புதல் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு, மேல்முறையீடு செய்தால் அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.