Homeசெய்திகள்தமிழ்நாடுஎதிர்க்கட்சிக் கூட்டம்- இன்று பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எதிர்க்கட்சிக் கூட்டம்- இன்று பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

"அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
Photo: DMK

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 22) பீகார் மாநிலத்திற்கு செல்கிறார்.

we-r-hiring

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி!

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நாளை (ஜூன் 23) காலை 11.00 மணிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்த கூட்டத்தை முன்னின்று நடத்துகிறார். இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில், வரும் 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் குறித்தும், பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்துவதற்கான வியூகம் குறித்தும் ஆலோசிக்கின்றனர்.

மூடப்படும் 500 மதுக்கடைகள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 22) மாலை 05.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவுக்கு செல்கிறார். பீகார் பயணத்தின் போது, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ