
தமிழகத்தில் இன்று (ஜூன் 22) முதல் மூடப்படும் 500 மதுபானக் கடைகள் குறித்த விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
எல்லைத் தாண்டியதாக 21 தமிழக மீனவர்கள் கைது!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 138 மதுபானக் கடைகளும், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 78 மதுபானக் கடைகளும் மூடப்படுகின்றன.
கால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்!
மதுரை, திண்டுக்கல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தில் 125 மதுக்கடைகள் மூடப்படுகின்றன. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் 59 மதுபானக் கடைகளும், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலத்தில் 100 மதுபானக் கடைகளும் என மொத்தம் 500 மதுபானக் கடைகள் இன்று (ஜூன் 22) முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.