spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - பெ.சண்முகம் வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – பெ.சண்முகம் வலியுறுத்தல்

-

- Advertisement -

வாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - பெ.சண்முகம் வலியுறுத்தல்

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை ஜனவரி 28, 2026ந் தேதி வரை நீட்டிப்பு செய்திடவும், 2026 ஜனவரி 24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், எஸ்..ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் . ஆறுமுக நயினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இக்கோரிக்கையினை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

we-r-hiring

MUST READ