spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபயணிகளுக்கு பரிசு- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

பயணிகளுக்கு பரிசு- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

-

- Advertisement -

 

Metro Train - மெட்ரோ ரயில்

we-r-hiring

சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர்! – யார் தெரியுமா?

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமானநிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை மெட்ரோ ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ இரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், டிசம்பர் 15- ஆம் தேதி முதல் மார்ச் 15- ஆம் தேதி வரை வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுபொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.​

முதல் மாதம் டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரையும், இரண்டாவது மாதம் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரையும், மூன்றாவது மாதம் பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரையும் ஆகும். ​இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட்வங்கி உடன் இணைந்து பரிசு பொருள்களை வழங்கும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம்…..ரசிகர்கள் அதிர்ச்சி!

​பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயணிகளை ஊக்குவிக்கவும் இவை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ