spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பொன்முடி!

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பொன்முடி!

-

- Advertisement -

 

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பொன்முடி!

we-r-hiring

பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜக அரசு பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம் என்பது தெளிவாகிறது – முத்தரசன்!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மார்ச் 22) பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்பு விழா எளிய முறையில் நடைபெற்றது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். அதைத் தொடர்ச்சியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பூங்கொத்து வழங்கினார். இந்த விழாவில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மோடி மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது – செல்வப்பெருந்தகை

அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் உயர்க்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ