spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதுலுக்கர்பட்டியில் தமிழி எழுத்துகளோடு பானை ஓடு!

துலுக்கர்பட்டியில் தமிழி எழுத்துகளோடு பானை ஓடு!

-

- Advertisement -

 

Photo: Minister Thangam Thenarasu Twitter Page

தமிழக நிதித்துறை மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி! திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன்.

we-r-hiring

தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்

அதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் ‘திஈய’, ‘திச’, ‘குவிர(ன்)’ ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்

MUST READ