Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்

-

- Advertisement -

தமிழக வெற்றிக்கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும் என எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் விநாயகர், மூலவர், ஆதிமூலவர், பைரவர் மற்றும் நவகிரக சன்னதிகளில் வழிபாடு நடத்திய அவர், பின்னர் கொடிமரத்தின் முன்பு வணங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

we-r-hiring

அப்போது பேசிய எல்.முருகன், அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்று குற்றம்சாட்டினார். தேர்தலின் போது மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நிதிநிலை சரியில்லை என்ற காரணத்தை முன்வைத்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களை ஏமாற்றக் கூடாது என்றும் கூறினார். தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்குவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை அரசு உடனடியாக வகுத்து நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சொன்னதை செய்பவர்கள் பாஜகவினர் என்றும், தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் விமர்சித்தார். சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்த எல்.முருகன், கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது பெண் குழந்தை பாதிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், முதலமைச்சர் நேரடியாக களத்தில் இறங்கி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எல்.முருகன் கேட்டுக்கொண்டார்.

மேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…

MUST READ