spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரயில்வே துறையின் சமீபத்திய கட்டண உயர்வால் பொதுமக்கள் கவலை-செல்வப் பெருந்தகை

ரயில்வே துறையின் சமீபத்திய கட்டண உயர்வால் பொதுமக்கள் கவலை-செல்வப் பெருந்தகை

-

- Advertisement -

ரயில்வே துறையின் சமீபத்திய கட்டண உயர்வு ரயில் பிரயாணம் செய்வோரை கவலைக்குள்ளாகியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.ரயில்வே துறையின் சமீபத்திய கட்டண உயர்வால் பொதுமக்கள் கவலை-செல்வப் பெருந்தகை மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “பொது மக்களின் பயண செலவுகளை அதிகரிக்கும் இந்த முடிவு, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களை பெரிதும் பாதிக்கும். மக்களின் வாழ்வாதார செலவுகள் ஏற்கெனவே உயரும் நிலையில், அடிப்படை போக்குவரத்து சேவையில் கூட கட்டண உயர்வு அறிவிப்பது சரியானது அல்ல. ரயில்வே துறை சேவை மனப்பான்மையுடன் செயல்படவேண்டும். எனவே, இந்த கட்டண உயர்வை ஒன்றிய அரசாங்கம் மீண்டும் பரிசீலித்து, மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முன்பிருந்தது போல் கட்டணம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஒன்றிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளாா்.

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

MUST READ