spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தரமான ஆவின் பால் வழங்க வேண்டும்"- தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

“தரமான ஆவின் பால் வழங்க வேண்டும்”- தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

“10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.

ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில் ,
தமிழக பா.ஜ.க. மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம்.

இவ்வாறு கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ