spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனை!

ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனை!

-

- Advertisement -

 

ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனை!

we-r-hiring

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்தனர்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ஹண்டர்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. கடைசி நேரத்தில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவைச் செய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கார்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர். அந்த வகையில், தேர்தல் பரப்புரைகாக ஹெலிகாப்டர் மூலம் நீலகிரிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார்.

அவரது ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்தனர். சோதனையில் பணமோ, பரிசுப் பொருட்களோ எதுவும் சிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

நீலகிரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்து தான் போட்டியிடும் வயநாடு தொகுதிக்கு போட்டியிடுகிறார்.

MUST READ