spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரயில் நிலையத்தில் மோதல்- 3 மாணவர்கள் கைது!

ரயில் நிலையத்தில் மோதல்- 3 மாணவர்கள் கைது!

-

- Advertisement -

 

ரயில் நிலையத்தில் மோதல்- 3 மாணவர்கள் கைது!

we-r-hiring

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி நேற்று (பிப்.13) பிற்பகல் மின்சார ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அந்த மின்சார ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

வேறு ஒருவர் நடித்திருந்தால் மலைக்கோட்டை வாலிபன் வெற்றி பெற்றிருக்கும்… பிரபல வில்லன் நடிகர் சர்ச்சை பேச்சு…

மின்சார ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையம் வந்தபோது அங்கு ஏற்கனவே கற்கள், பாட்டில்களுடன் காத்திருந்த பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, மாநிலக் கல்லூரி மாணவர்களும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் ரயில் மற்றும் பிளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருந்த பயணிகள் பீதியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை காவல்துறையினரைப் பார்த்ததும், மாணவர்கள் சிதறிடித்து ஓடினர்.

நடிகை பூனம் பாண்டேவிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக, பெரம்பூர் ரயில்வே காவல்துறையினர், பச்சைப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிகளை சேர்ந்த 60- க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரை ரயில்வே காவல்துறையினர் இன்று (பிப்.14) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மற்ற மாணவர்களையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, வீடியோ காட்சிகளை 2 கல்லூரிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பி வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.

MUST READ