spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகம்ப்யூட்டர் ‘ஜாப் ஓர்க்’ தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி.. 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த...

கம்ப்யூட்டர் ‘ஜாப் ஓர்க்’ தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி.. 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மோசடி நபர் பெங்களூரில் கைது!

-

- Advertisement -

ஈரோட்டில், கம்ப்யூட்டர் ‘ஜாப் ஓர்க்’ தருவதாக கூறி, 1 கோடியே 20 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில், 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் பெங்களூரில் கைது செய்தனர்.

சேலம் பழனியப்பா நகரை சேர்ந்த பிரபாகரன் (51), ஈரோட்டில் கடந்த 2002ம் ஆண்டு கம்ப்யூட்டர் டேட்டா வேலை அளிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த வேலைக்கு முன் பணத்திற்கு ஏற்ப டேட்டா வேலை தருவதாகவும், வேலைமுடிந்து அதை அலுவலகத்தில் ஒப்படைத்ததும், செலுத்திய பணத்தை விட இரு மடங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறி விளம்பரம் வெளியிட்டுள்ளார். இதனை உண்மையென நம்பிய பொதுமக்கள் பிரபாகரனிடம் பணம் செலுத்தி கம்ப்யூட்டர் டேட்டா வேலைகளை பெற்று செய்துள்ளனர். அந்த வேலைகளை முடித்த பின், பிரபாகரனிடம் ஒப்படைக்க அவரது அலுவலகத்திற்கு சென்றபோது, அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. பிரபாகரனும் தலைமறைவானார்.

we-r-hiring

இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஈரோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, ஈரோடு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டதில், பிரபாகரன் ஈரோட்டில் கம்ப்யூட்டர் டேட்டா ஜாப் ஓர்க் தருவதாக பொதுமக்களிடம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்து மோசடி செய்ததும், பிரபாகரனுடன் கூட்டாளிகளாக ஈரோடு கொத்துக்காரர் வீதியை சேர்ந்த சவுந்திரபாண்டியன் (50), பிரபாகரனின் மனைவி வண்டார்குழலி (51), சேலம் குமாரகிரிபேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (49), அதேபகுதியை சேர்ந்த வீரக்குமார் என்ற வீரமணி (45), சேலம் கிட்சிபாளையத்தை சேர்ந்த அரசேந்திரன் (62) ஆகிய 6 பேர் இணைந்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் மோசடி- பெண் கைது

மேலும், இவர்கள் சேலம் மாவட்டத்தில் பிசினஸ் சொல்யூசன் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பிரபாகரன், அவரது மனைவி உட்பட 6 பேர் மீதும் மோசடி உட்பட 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மூன்றாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதில், பிரபாகரன் மட்டும் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து தற்போது வரை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் பிரபாகரனை கைது செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஈரோடு நீதிமன்றம் கடந்த 16 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ள பிரபாகரனை தலைமறைவு குற்றவாளியாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.

போலி 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வேறு ஒரு வழக்கில் குற்றவாளியை பிடிக்க கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு சென்றனர். அப்போது, அந்த நபருடன், பிரபாகரன் இருந்துள்ளார். அவரையும் சைபர் கிரைம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவர் மீது போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால், அவரது விவரங்களை சோதனை செய்தபோது ஈரோடு, சேலம், நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிசினஸ் சொல்யூசன்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மேசாடி செய்து, சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனை தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார், ஈரோடு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், கைது செய்யப்பட்டு பிரபாகரன் ஈரோடு நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டார்.

MUST READ