spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெப். முதல் மகளிருக்கு மாதம் ரூ.1,000

செப். முதல் மகளிருக்கு மாதம் ரூ.1,000

-

- Advertisement -

செப். முதல் மகளிருக்கு மாதம் ரூ.1,000

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்

  • ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சியில் தோல் பொருள் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன்மூலம் 32 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • தொழிற்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.3,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு
  • விருதுநகர், கள்ளக்குறிச்சி, வேலூர், கோவையில் ரூ.410 கோடியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
  • எத்தனால் உற்பத்திக்காக ரூ.5,000 கோடி முதலீட்டை ஈர்க்க புதிய கொள்கை
  • சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 7 மாநகராட்சிகளில் முக்கிய இடங்களில் இலவச வைபை வசதி
  • ஒகேனக்கல், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இணையவசதியை கொண்டு செல்லும் வகையில் கண்ணாடி இழை தொடர்புக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு
  • நாகூர் தர்காவை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.
  • தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூரில் TNTECH CITY அமைக்கப்படும்.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அரசு பணியாளர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக அதிகரிப்பு
  • பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதமாக குறைப்பு
  • குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வரும் நிதியாண்டில் அமல்படுத்தப்படும். செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும். குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

MUST READ