Homeசெய்திகள்தமிழ்நாடுRTE- ன் கீழ் சேரும் மாணவர்களின் கவனத்திற்கு....- பள்ளிக்கல்வித்துறைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

RTE- ன் கீழ் சேரும் மாணவர்களின் கவனத்திற்கு….- பள்ளிக்கல்வித்துறைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

 

RTE- ன் கீழ் சேரும் மாணவர்களின் கவனத்திற்கு....- பள்ளிக்கல்வித்துறைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
File Photo

அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (Right To Education) கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்களை அரசுதான் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவரின் பெற்றோரிடம் சீருடை, புத்தகங்களுக்கு 11 ஆயிரத்து 977 ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட மாணவரின் தந்தை மகாராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல் காந்தி பேச்சு!

இந்த வழக்கை இன்று (மே 20) விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ஏற்கும் அரசுதான், சீருடை மற்றும் புத்தகங்களுக்கான கட்டணத்தையும் ஏற்க வேண்டும் என்றும், இது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க பள்ளிக்கல்வித்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் தனியார் பள்ளிக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது.

MUST READ