Homeசெய்திகள்தமிழ்நாடுசேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு!

சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு!

-

 

சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வாக்களிக்க சென்ற இரு வயதானவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 55,000- ஐ கடந்தது!

தமிழகத்தில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த சூழலில், சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வாக்குப்பதிவு எவ்வித இடையூறும் இன்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற இரண்டு வயதானவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து தேர்தல் அதிகாரிகள், வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு”- தேர்தல் ஆணையம் தகவல்!

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற 77 வயது மூதாட்டி சின்னப்பொண்ணு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது வருவாய்துறை அதிகாரிகள் வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்,

அதேபோல், சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி தனது மனைவியுடன் சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்கச் சென்றார். அப்போது பழனிசாமி (வயது 65) மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

MUST READ