
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்.28) தீர்ப்பளிக்கிறது.
காரைக்குடி சால்வை சம்பவத்துக்கு எதிரான கண்டனங்கள்… வருத்தம் தெரிவித்த சிவகுமார்!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற கடந்த பிப்ரவரி 14, 15, 21 ஆகிய தேதிகளில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
ராயன் படத்திற்காக சூப்பரான ஸ்கெட்ச் போட்ட தனுஷ்…… தினமும் ஒரு போஸ்டர் ஏன்?
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (பிப்.28) காலை 10.30 மணிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது தீர்ப்பளிக்கவுள்ளார்.