Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

-

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 21) நடைபெறவுள்ளது.

காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் ‘லியோ’ டிரைலர்……. எப்போது தெரியுமா?

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டம் வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் இரு வேறு தீர்ப்பினை வழங்கினர்.

இதையடுத்து, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது எனத் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் புதிய வெப் சீரிஸ்…… டீசர் ரிலீஸ் அப்டேட்!

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் முறையீடப்பட்டது.அவர்களின் மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்களை விசாரிக்கவுள்ளது.

MUST READ