spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெப்.17 பொது விடுமுறை - தமிழக அரசு

செப்.17 பொது விடுமுறை – தமிழக அரசு

-

- Advertisement -

செப்.17 பொது விடுமுறை - தமிழக அரசு

செப்.17 மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை.

செப்.17-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடுவதாக, தலைமை ஹாஜி அறிவித்த நிலையில், அன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

we-r-hiring

மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது முன்னதாக ஏற்கனவே செப். 16-ஆம் கொண்டாடப்படும் என அறிவித்த நிலையில், செப்.17 மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக இருந்த நிலையில் அன்றைய தினம் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்ட பிறை தெரியாததால், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

இதனை தொடர்ந்து தமிழக அரசிடம் தலைமை ஹாஜி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ