- Advertisement -
வார இறுதி மற்றும் பௌர்ணமியை ஒட்டி சென்னையில் இருந்து இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மொத்தம் 985 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 600 சிறப்பு பேருந்துகளும், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 410 பேருந்துகளும் இயக்கபட உள்ளது. இது தவிர வழக்கமான பேருந்துகளும் செயல்பாட்டில் இருக்கும்.