மே 31-ந்தேதி தமிழக முதலமைச்சரின் மாபெரும் ரோடு ஷோ நடைபெறுகிறது. இதில் தி.மு.க.வுக்கு அரும்பாடுபட்ட மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.ஜூன் 1-ந்தேதி வரலாறு காணாத வகையில், மதுரையில் தி.மு.க. பொதுக்குழு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாநில அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
அதற்கு முதல் நாளான மே 31-ந்தேதி தமிழக முதலமைச்சரின் மாபெரும் ரோடு ஷோ நடைபெறுகிறது. இந்த ரோடு ஷோ மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்ரத் புரம், காளவாசல், குரு தியேட்டர், திருமலை நாயக்கர் சிலை வழியாக நடைபெற்று தி.மு.க.வுக்கு அரும்பாடுபட்ட மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அனைவரும் திரும்பி பார்க்கக் கூடிய மதுரையின் 10 தொகுதியின் வெற்றிக்கு அடித்தளமாகவும், தேர்தல் வியூகமாகவும் இந்த ரோடு ஷோ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், அரசியலுக்கு தலைநகரம் மதுரை என்று சொல்லுகின்ற அளவிற்கு பல மாற்றங்களை மதுரை கண்டு இருக்கிறது. இதற்கு முன்பு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற திமுக மாநாடு மாபெரும் திருப்பு முனை மாநாடாக அமைந்தது. அதேபோல் ஒரே நாளில் மேலூர் டங்ஸ்டன் வெற்றி மாநாடு அமைந்திருந்தது.