Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

-

- Advertisement -

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்! என விசிக நிறுவனர், தலைவர்,தொல்.திருமாவளவன் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்..தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

மேலும் தனது பதிவில் கூறியிருப்பதாவது,” மார்ச் 18 2025 அன்று இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளனர். அந்த மூன்று பேர் உட்பட ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 110 தமிழ்நாடு மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் அவர்களது படகுகளையும் மீட்க வேண்டும் என மாண்புமிகு இந்திய ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

கடந்த மூன்று மாதங்களில் இதுவரையில் 10 முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீன அரசின் தலையீடு இதில் இருப்பதாக இலங்கை தமிழர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின் தலையீடு மேலும் பதற்றத்தை உருவாக்கும் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்வி எழும். தினக்கூலிக்காக பணியாற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அவர்களின் பொருளாதாரத்தை நிலைப்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரின் நெருக்கடிகள் இல்லாமல் வாரம் தோறும் குறிப்பிட்ட நாட்களில் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடித்திடும் வகையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளாா்.

டெல்லியில் இறங்கிய செந்தில் பாலாஜி! ஓடி ஒளிந்த அண்ணாமலை! உடைத்துப்பேசும் தராசு ஷ்யாம்!

MUST READ